திங்கள், 12 செப்டம்பர், 2011
இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அரசே விழா எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராம தாஸ் (10.09.2011) அஞ்சலி செலுத்தினார்.
தியாகி இமானுவேல் சேக ரன் நினைவு நாள் ஆண்டு தோறும் செப்டம்பர் 11ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் (10.09.2011) பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரமக்குடிக்கு வந்து இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் மாநில தலைவர் கோ.க. மணி, பொது செயலாளர் வடிவேல் ராவணன், கொள்கை விளக்க செயலாளர் விளனரசு, மாநில துணை பொது செயலாளர் தள பதி ராஜ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் தங்க ராஜ், பரமக்குடி நகர் செயலா ளர் கோவிந்தன், முன்னாள் செயலாளர் அர்ச்சுணன், மத் திய தொழிற்சங்க செயலா ளர் கணேசன், ஒன்றிய இளை ஞரணி செயலாளர் பால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் டாக்டர் ராம தாஸ் நிருபர்களிடம் கூறிய தாவது: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன் முதலில் அஞ்சலி செலுத்தியது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக அஞ்சலி செலுத்தி வருகிறோம். இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழா வாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ஆண்டு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அரசே விழா எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக