செவ்வாய், 27 செப்டம்பர், 2011
பரமக்குடி துப்பாக்கி சூடு- கலெக்டருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு
பரமக்குடி துப்பாக்கி சூடு- கலெக்டருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்புதிங்கள், 26 செப்டம்பர் 2011( 15:28 IST )பரமக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், பரமக்குடியில் காவல்துறை அவசியமின்றி துப்பாக்கி சூடு நடத்தியதால் 6 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு காரணமான மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு வழக்கை தள்ளிவைத்துள்ளது.
பரமக்குடியில் கடந்த 11ஆம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக