செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?

ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு தேவர் சிறைக்கு சென்றார் என்று நீர் சுட்டிய குறிப்பில் இல்லையே. 1930களில் ஒத்துழையாமை என்பது கேலிக்கூத்தாக காங்கிரசால் நடத்தப்பட்டு, அது காந்தி-இர்வின் எனும் துரோக ஒப்பந்தம் மூலம் நின்றுபோனதும், இந்த ஆசாமிகள் வட்டமேசை மாநாடு போனதும், பின்னர் கொஞ்சக்காலம் ஒத்துழையாமை சடங்கு செய்து அதுவும் போய் ஜில்லாபோர்டு எலெக்சனில் பதவிக்கு சண்டைபோட்டதும் நாறிப்போன விசயம். 1936ல் ஜில்லாபோர்டு எலெக்சனுக்கு தேவர் பிரச்சாரம் செய்தார்- அதுதான் அவரின் ஆரம்பம்-தீவிர அரசியல் வேலையில்-- ஒத்துழையாமையில் அவர் கைது செய்யப்பட்டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 1937ல் காங்கிரசு ஆட்சிக்கு வந்தபோது மகாலட்சுமி மில் ஸ்டிரைக்கில் தேவர், காங்கிரசு பிரதமர் ராஜாஜியாலேயே கைது செய்யப்பட்டார். அதுதான் முதல் கைதாக இருக்கும் என எண்ணுகிறேன். அல்லது, அதற்கு முன்பு, ஜட்ஜ் காலை வெட்டிய கேசிலோ, துணை தாசில்தாரைக் கொன்ற வழக்கிலோ அவர் ஜெயிலுக்குப் போயிருக்கலாம்.

கொலைக்கேசிலும், அடிபுடி கேசிலும் செயிலுக்குப்போன ஆசாமிக்கு ஒத்துழையாமை வேசம் போட மேலும் சான்றுகளோடு வாரும். பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக