செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?

இம்மானுவேல் கொல்லப்பட்டதில் தேவரின் பங்கு என்பது உங்களது நம்பிக்கையைப் பொறுத்து 'உண்டு' (அ) 'இல்லை' என அமைவதில்லை என்பதையும், 1957ல் இச்சதி வழக்கில் தேவருக்கு எதிராக அரசுத்தரப்பில் வாதிட எந்த வக்கீலும் முன்வரமுடியாத அளவிற்கு கொலைமிரட்டல்கள் வக்கீல்களுக்கு வந்தன என்பதினையும் நினைவில் கொள்ளுங்கள்..

துணிந்து வழக்காட வந்த எத்திராஜ் (எத்திராஜ் கல்லூரியை நிறுவியவர்) பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாகினார். வழக்கு நடந்த புதுக்கோட்டை நீதிமன்றத்துக்கு எத்திராஜ், சென்னையில் இருந்து சென்று வரும்போதெல்லாம், ஆயுதப்போலீசார் அவருக்கு துணையாகச் செல்லவேண்டி இருந்தது.

தேவருக்கு தூக்குக் கயிறை செய்யும் பெருமாள் பீட்டரின் சாட்சியத்தைக் குறுக்கு விசாரணை செய்யும் சூழலில், பல்வேறு இடைஞ்சல்களால், எத்திராஜ் மவுனமாகி நின்றதும், ஜட்ஜ் கேட்டபோது, 'பீட்டரின் சாட்சியம் மட்டுமே தேவரின் இன்வால்வ்மெண்டை உறுதிசெய்யாது' என சேம்சைடு கோல் போட்டுத்தான் தேவரய்யா கொலைச்சதியில் இருந்து தப்பினார். இவ்வழக்கில் ஏ.1 குற்றவாளியான தேவர் தப்பினாலும், ஏ3லிருந்து மற்ற குற்றவாளிகள் பலருக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக