புதன், 19 அக்டோபர், 2011

தென் தமிழ் நாட்டில் சாதி பிரச்சனையின் காரணம்...

தென் தமிழ் நாட்டில் அதிகமாக சாதி கலவரங்களும், பிரச்சனைகளும் நடப்பதன் முக்கிய காரணம். தேவர் சாதியிருக்கும் பட்டியல் இன சாதியிருக்கும் பிரச்சனைகள்.

1940களில் பெரியார் திராவிட இயக்கத்தை ஆரம்பித்து சாதி மறுப்பையும், கடவுள் மறுப்பையும் பரப்பி சமூக நீதிக்காக போராடி வந்தார். பெரியார் அம்பேத்கார், முகமது அலி ஜின்னா போன்ற தலைவர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு சமூக நீதிக்காக போராடினார். 1948இல் புதிய திராவிட இயக்கம் வந்த போது கூட திராவிட இயக்க கொள்கைகள் அதிக வேகத்துடன் மக்களுக்கு சென்றது.

1952 தேர்தலில் திமுக போட்டியிட வில்லை. தமிழ் நாட்டில் அதிக இடங்களை கம்னிஸ்டுகள் பிடித்த போதும் அறுதி பெரும்பான்மை இல்லை. அப்போது ஆளுனராக இருந்த பிரகாசம் கம்னிஸ்டுகளை ஆட்சி அமைக்க அழைக்காமல் சட்டதிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார், ராசகோபாலச்சாரியார் முதல் அமைச்சராக பதவி ஏற்று குதிரை பேரம் நடத்தி, சுயேச்சைகள் மற்றும் உதிரி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தது.

அந்த காலக்கட்டதில் பட்டியல் இன சாதி தலைவர் இம்மானுவேல் கொலை வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டார், இவர் தமிழ் நாட்டில் பார்வார்ட் ப்ளாக் கட்சியை நடத்தி கொண்டு, இடதுசாரி இயக்கமான பார்வார்ட் ப்ளாக் கட்சிக்கு எதிரான தேசியமும், தெய்வீகமும் தனது கொள்கை என முழங்கி வந்தார்.

குலகல்வி திட்ட பிரச்சனையில் ராசகோபாலச்சாரியார் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின் ஆதிக்க சாதியினருக்கு காங்கிரஸ் மேல் கோபமோ கோபம்.

பெரியார் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதே நோக்கம் என்றார், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிய வந்த முத்துராமலிங்க தேவரும், சின்னதனமாக கங்கிரஸை ஒழிப்பேன் என்றார்.

ஆனால் பெரியார் சாதி ஒழிய வேண்டும், தேசியம் ஒழிய வேண்டும் என்றார். முத்துராமலிங்க தேவர் தெய்வீகமும், தேசியமும் கொள்கை என்றார்.

பெரியார்கள் கொள்கைகள் பரந்து விரிந்த, ஈரோடு, கோவை பகுதிகளிலோ, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளிலோ சாதி பிரச்சனைகள் இல்லை. காமராசரை ஏற்று கொண்ட குமரி மாவட்டத்திலும் சாதி கலவரம் இருக்காது, அங்கு ஆர்.எஸ்.எஸ். - பாஜக வேலைகளால் மத கலவரம் மட்டுமே நடக்கும்.

ஆனால் முத்துராமலிங்க தேவரை ஏற்று கொண்ட மதுரை, ராமநாதபுரம், நெல்லை பகுதிகளில் சாதி தீ கொளுந்து விட்டு எரிகிறது.

முத்துராமலிங்க தேவர் சமூக நீதிக்கு எதிரானவராக நடந்து கொண்டவர், அவரின் பெயரால் சாதி பிரச்சனைகள் தொடர்கின்றன.

பெரியாருக்கு எதிராக முத்துராமலிங்க தேவரை பயன்படுத்தியவர் யார்? மதுரையை சேர்ந்த ஸ்ரீநிவாச ஐயங்காராம். ஆதிக்க சாதியிருக்கு ஒரே கல்லில் எத்தனை மாங்காய், காங்கிரஸை திட்டுவதாக சொல்லி காமராசரை தாக்கியாகி விட்டது, பெரியார் மற்றும் திராவிர கட்சிகளை தாக்கியாகி விட்டது. தென்மாவட்டங்களில் சாதி தீ அணையாமல் எரிகிறது. மக்கள் சாதிக்கு அடிமையாக, இவர் இந்து மதத்திற்கு அடிமையாக்கி கொண்டது.

அந்த காலத்தில் ஸ்ரீநிவாச ஐயங்காருக்கும் முத்துராமலிங்க தேவருக்கும் இருந்த பந்தம், இப்போது தேவரின சசிகலாவுக்கும், ஐயங்கார் ஜெவுக்கு தொடர்கிறாதாம். இதை நான் சொல்ல வில்லை. முத்துராமலிங்க தேவர் நூற்றுவிழா ஜெ.டிவி நிகழ்ச்சியில் சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக