செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?

தேவர், 1934க்கு பிறகுதான் காங்கிரஸ் கூட்டங்கள், மாநாடுகளுக்கு வர ஆரம்பிக்கிறார். அது அவரின் தவறும் இல்லை.. அப்போது அவரின் இளம்வயதைக் கணக்கில் கொண்டால், அது பெரிய தவறில்லைதான். காங்கிரசின் பெரிய போராட்டங்களில் ஒன்றான உப்புக்காய்ச்சும் சடங்கில் தேவர் கலந்து கொண்டதில்லை. நேரடியாக 1937 தேர்தலில் காங்கிரசு சார்பில் ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றார். அவர் வெற்றிபெற்றாலும், சில இடங்களில் ஓட்டுபோடாத தலித் மக்களைத் தாக்கிடத் தூண்டுதலாய் இருந்தார். இது சம்பந்தமான வழக்கில் தேவருக்கு பாதகமாய் தீர்ப்பு சொன்ன நீதிபதியின் கால் வெட்டப்பட்டது. ஒரு டெபுடி தாசில்தார் கொல்லப்பட்டார். வெள்ளைக்கார அரசு, தேவர் வாயைத்திறந்து பேசினாலே கலவரம் வருவதால் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டது. அதன் பின் காங்கிரசும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டபோதும் அதில் தேவர் கலந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அவர் வாய்ப்பூட்டு சட்டத்தில் சிக்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தேவர் ஒரு மில் ஸ்டிரைக்கில் கலந்திருந்தார். அப்புறம், சி டி ஆக்டை (குற்றப்பரம்பரை சட்டம்) நீக்க வேண்டும் என்று ஒரு போராட்டம்.

1947ம் வந்து விட்டது.. 1948, 1949 களில் ராமநாதபுரத்தில் சாதிக்கலவரங்கள்... தேவரும் பார்வர்டு பிளாக்கில் 1949ல் ஐக்கியமாகி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் 1946 தேர்தலில் எம் எல் ஏ ஆகி, அட்டெண்டன்ஸ் இல்லாததால் தகுதி நீக்கம் ஆகி விட்டார்.

இதுதாம் 1947க்கு முன் தேவரின் நிலை. இதில் தேவர் சுதந்திரப்போராட்டத்தில் எங்கே நிற்கிறார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக