செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?


தேவரின் கோபமூட்டும் பேச்சால், இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'தேவர், காலித்தனம் செய்கிறார். அந்த ஆசாமியைப் பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.

அரசும் தேவரைக் கைது செய்தது. பின்னர் எங்கெல்லாம் கலவரத்தில் ஈடுபட்டார்களோ அந்த ஊர்களில் தேவர், தேவேந்திரர் ஆகிய இருதரப்பினரிலும் நூற்றுவரைக் கைது செய்தது. சில மறவர் ஊர்களில் ஊர்ப்பெருசுகள், இளைஞர்களை (கலவரத்தில் ஈடுபட்ட) மறைத்து வைத்தனர். அவர்களுடன் பிராமணர் இனத்தவரான டி.எஸ்.பி. (பெயர் மறந்து விட்டது) பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை ஒப்படைக்க வேண்டினார். அப்போது அம்மறவர் இனத்துப் பெருசுகள் சொன்ன பதில்:- "அய்யா, நீங்க சொல்றதுனால நாங்க எங்க பயலுகள ஏன் ஒப்படைக்கிறோம் தெரியுமா? நீங்க பிராமணர். ஒங்களுக்கு நாங்க கீழ்ப்படிஞ்சாத்தான், அந்தப் பசங்க (பள்ளர்) எங்களுக்குக் கீழ்ப்படிவாங்க. அதனாலதான் நாங்க ஒங்க பேச்சுக்குக் கட்டுப்படுறோம்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக