வியாழன், 20 அக்டோபர், 2011

தெய்வத்திருமகன்’ பெயருக்கு காப்புரிமம் வாங்கிய தேவர் சாதியினர்!



 ‘தெய்வத்திருமகன்’ இப்பெயரை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது.
நீங்கள் நகரத்தில் இருந்தால் படத்தின் பெயர் ஞாபகத்துக்கு வரும். ஆனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருமென்றால் ‘தெய்வத்திருமகனார் பசும் பொன் முத்துராமலிங்க தேவர்’ என்னும் முழுபெயரும் தான் ஞாபகத்துக்கு வரும்.

விக்ரம் நடிக்கும் தெய்வத்திருமகன் என்னும் படத்திற்கு தேவர் சாதியினர் கடும் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஏனெனில் தெய்வதிருமகன் என்னும் பெயர் முத்துராமலிங்கத்தை மட்டுமே உரியது. முத்துராமலிங்கத்தை தெய்வதிருமகனார் என்றே தேவர் சாதியினர் அழைப்பது வழக்கம். அந்த திருப்பெயரை மற்றவர்கள் பயன்படுத்துவதா? அதுவும் விக்ரம்(?) நடிக்கும் படத்துக்கா? (இதற்காக நாம் விக்ரமை ஆதரிக்கவில்லை. சினிமா கழிசடை கதாநாயகர்களுக்கு என்ன மதிப்பீடோ அதே மதிப்பீடு தான் விக்ரமுக்கும் பொருந்தும்)

முத்துராமலிங்கம்
தெய்வ திருமகனார் என்னும் பெயரை வைத்து முத்துராமலிங்கம் ஒரு கடவுளின் அவதாரம் என்றோ, கிறித்தவர்கள் சித்தரிக்கும் இயேசு போன்றோ அல்லது இஸ்லாமியர்கள் சித்தரிக்கும் இறைத்தூதர் போன்றோ நீங்கள் எண்ணிவிடக்கூடாது.  உண்மையை சொல்லவேண்டுமென்றால் முத்துராமலிங்கம் ஒரு கொலைக்குற்றவாளி.

தியாகி இம்மானுவேல் சேகரன்
ஆதிக்க சாதிவெறியை எதிர்த்து வீரத்துடன் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனை கொன்ற கொலைக்குற்றவாளி. தாழ்த்தப்பட்டவன் தனக்கு சரிசமமாக பேசிவதா?
பேசக்கூடாது. நீதியை பேசியவரின் பேச்சை மூச்சை பிடுங்கிய நல்லவர்(!) தான் முத்துராமலிங்கம்.
சாதியை வெறித்தனமாக கடைப்பிடித்தும் இன்னும் ஆண்டப்பரம்பரையினர் என்னும் எண்ணத்திலிருந்து மீண்டுவராமலும் முற்கால மனிதர்களாகவே இருக்கின்றனர் முத்துராமலிங்கத்தை பின்பற்றும் முக்குலத்தோர்.
நவீனமான இந்த நகர சமூகத்தில் நாங்கள் சாதிப்பார்ப்பதில்லை என்று சொல்லும் அவர்கள் முத்துராமலிங்கம் என்று சொல்லாமல் ‘தேவர்’ என்றே மறக்காமல் உச்சரிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் புதிய ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அவருடைய அலுவலங்களுக்கு செல்வது வழக்கமானது. சமூகத்தில் சாதியைப்பற்றி பற்றி பேசும் போது பிற்போக்குதனங்கள் பேசும் போது அவரும் ஆமோதிப்பார். ஆனால் நாளடைவில் அவர் ஃபார்வர்ட் பிளாக் கட்சியுடன் தொடர்புவைத்து இன்று முக்கிய புள்ளியாக பதவி வகிக்கிறார். அவர் ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் சேரும் போது தேவர் பெருமைகளை அள்ளி வீசுவார். காது பொருக்காது. அவரிடம் முத்துராமலிங்கம் ஒரு சாதி வெறியர் என்று பேசும் போது அதற்கு மறுப்பாக அவர் “தேவர் அவர்கள் சாதியெல்லாம் பார்த்தது கிடையாது. அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன் நிலங்களை வழங்கியவர்” என்றார். இதை விட பயங்கரமான குண்டை தூக்கிப்போட்டார் அதாவது “தேவர், சாதியொழிக்க போராடினார். முக்குலத்தோர் சாதிவேறுபாடுகள் பார்ப்பதில்லை” என்றார். (சாதியொழிக்க போராடினார் என்னும் போதெல்லாம் ‘தேவர்’  ‘தேவர்’ என்று தேஞ்ச ரெக்கார்ட் போல சொல்வது நகைச்சுவை தான்) பரவலாக இதே கருத்தைத்தான் ஆதிக்க சாதியினர் பேசுவார்கள்.  அந்த நண்பரிடம் “சாதிவேறுபாடுகள் பார்ப்பதில்லை என்னும் நீங்கள் முத்துராமலிங்கத்தை மட்டும் தேவர் என்று சாதியை தனித்து அடைப்படுத்துவதேன்?” என்று கேட்டேன். ஆனால் மழுப்பல் மட்டுமே பதிலாக இருந்தது. அதற்கு பிறகு அவரை சந்திக்கும் போது அவர் தேவர் என்ற வார்த்தையை சொல்ல மாட்டார். அதற்காக ‘முத்துராமலிங்கம்’ என்றும் சொல்ல மாட்டார். முத்துராமலிங்கத்துக்கு இழுக்கு சேர்க்காமல்  ‘தெய்வ திருமகனார்’ என்று சொல்வார். தேவர் என்னும் பெயரை புனிதம் என்று கருதுகின்றனர். முத்துராமலிங்கம் என்று சொன்னால் அவரை இழுக்கு செய்வதாகவும் கருதுகின்றனர். தேவர் என்னும் சாதிப்பெயரை அடையாளப்படுத்தாமல் இருந்தால் அவர்களின் ஆன்மா(!) அழிந்துவிடும் போல் உணர்கிறார்கள்.
கிராமங்களிலிருந்து நகரத்தில் ஐ.டி துறையில் வேலைப்பார்க்கும் நண்பர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நாகரீக மனிதனாய் உடையணிந்து அநாகரீகமாக ‘நான் தேவர் சாதி’ என்னும் மிதப்பில் இருக்கின்றனர். சில சமயங்களில் வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை. தேவர் என்றும் தேவேந்திரர் என்றும் மாயையில் வாழ்பவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்.
பூணூல் மூலம் தன் சாதியை வெளிப்படுத்துபவர்களுக்கும் பெயரின் மூலம் தன் சாதியை வெளிப்படுத்துபவர்களுக்கும் பாரிய வித்தியாசம் இல்லை.
ஆனால் பூணூல் எதிர்க்கும் சில முற்போக்குவாதிகள் தேவர் சாதிப்பெயரை எதிர்ப்பதில்லை. இதில் தாங்கள் பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்பவர்களும் அடக்கம்.
கம்யூனிஸ்டுகள் என்று சொல்லித்திரியும் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் பற்றி சொல்லத்தேவையில்லை. ஏனெனில் அவர்கள் நேர்மையாக(!) பூணூலையும் எதிர்ப்பதில்லை, சாதிப்பெயரையும் எதிர்ப்பதில்லை. தேவர் என்றே மறக்காமல் அவர்களும் உச்சரிக்கின்றனர்.
பெயரில் கூட சாதியை தூக்கியெறியமுடியாத மக்களாகத்தான் முக்குலத்தோர் இருக்கின்றார்கள். சாதியை புனிதமாக பாதுகாக்கின்றனர். புனிதம் என்று கருதும் தங்கள் தலைவர்களின் பெயர்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் போல காப்புரிமை(Copyrights) வாங்குகிறார்கள்.
சரி. இவர்கள் தங்களைத் ‘தேவர்’ என்கிறார்களே, அப்படியென்றால் மற்றவர்கள் என்ன ‘அரக்கர்களா’?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக