செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?

சுதந்திரப்போராட்டத்தில் தேவரின் விசுவாசம் எப்பேர்ப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
காந்தி மீது பலருக்கு பலவகையில் விமர்சனம் இருப்பினும், அக்காலகட்டத்தில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சுதந்திரப்போரின்போக்கை மாற்றும் வலிமை, செயல்தந்திரம் காந்தியிடம் இருந்தது என்பதனை அனைவரும் ஒத்துக்கொள்வர். அவரின் இறுதிக்காலம், மதவெறி சக்திகளிடம் போராடுவதில் கழிந்தது என்பதும், இந்து மதவெறிக்கூட்டத்தின் துப்பாக்கிக்கு அவர் கொல்லப்பட்டதும் எண்ணற்பாலது. காந்தியிடம் கடும் கருத்துவேறுபாடு கொண்டிருக்கும் இடதுசாரிகளோ, அல்லது ஏனைய தேசியவாதிகளோ அவரின் கொலையை ஆதரித்திட்டதில்லை. ஆனால் தேவரய்யா காந்தியின் சாவைக்கூட கொச்சைப்படுத்திப் பேசியவர்தான். "இந்துக்கள் பட்ட கஷ்டங்களுக்கு அவர் செவிமெடுக்க மறுத்தார். அதனால்தான் அவரின் சாவு கூட தரமற்ற சாவாக இருந்தது".. இது தேவரய்யா வசனம்.

அடுத்து இன்னொரு காரியம் செய்துள்ளார். நாடே, காந்தியைக் கொன்ற கூட்டத்தை வெறுத்து ஒதுக்கும் வேளையில் அக்கொலைக்கூட்டத்தின் சகாவான கோல்வல்க்கரை மதுரைக்கு அழைத்து வந்து பொன்முடிப்பு கொடுத்து வாழ்த்திப் பேசினார் தேவர். அச்செயலை நியாயப்படுத்தி "காந்தி இந்து மதத்தின் விரோதி. எனவே கோல்வல்க்கருக்கு பணமுடிப்புக் கொடுக்க இசைந்தேன்" என்றும் கூறி இருக்கிறார்.

சுதந்திரப்போரை எல்லா இடங்களிலும் காட்டிக்கொடுத்தும், பிரிட்டிஷ் காரனுக்கு மன்னிப்புக்கடுதாசி எழுதி எழுதியே கிலோக்கணக்கில் பேப்பர்களை வீணடித்த வீர சாவர்க்கர் பரம்பரையினருக்கு (வாஜ்பேயி கூட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்ட நபர்களை வெள்ளைக்காரனுக்குக் காட்டிக்கொடுத்த கயவாளிதான் என்பதை நாடே அறியும்) இந்துவெறிக்கும்பலுடன் கூடிக்குலாவிய தேவரய்யாவை சுதந்திரப்போர் தியாகி என்பது தகுந்த செயல்தானா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக