ஞாயிறு, 18 டிசம்பர், 2011

தமமுக கொடியேற்று விழா

சங்கரன்கோவில், டிச 17: சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கொடியேற்று விழாவில் அதன் நிறுவனர் ஜான் பாண்டியன் கலந்துகொண்டார்.இத்தொகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கட்சியின் கொடியேற்று விழா, பெயர்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. களப்பாகுளம், சீவல்ராயனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை கட்சிக் கொடியேற்றப்பட்டது. அழகனேரி, சின்னவாகைக்குளம், நாலுவாசன் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமையும், காரிசாத்தான், பாறைப்பட்டி, வீரணாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சனிக்கிழமை கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ச.இன்பராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் செ.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.மாநில அமைப்புச் செயலர் நெல்லையப்பன், மாநககர செயலர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் டி.அருண், முனியசாமி, சாந்தகுமார், எஸ்.அகஸ்டின், செ.மகாராஜன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக