புதன், 4 ஜனவரி, 2012

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை, ஜன. 3: "தானே' புயலால் சேதமடைந்த தென்னை, முந்திரி, பலா போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.




இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:



"தானே' புயலால் ஏற்பட்ட சேதத்தை முழுமையாகக் கணக்கிட வேண்டும். புயல் காரணமாக தென்னை, முந்திரி, பலா போன்ற நீண்டகாலப் பயிர்கள் முற்றிலும் அழிந்து விட்டன. இதிலிருந்து விவசாயிகள் மீள்வதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். எனவே, தென்னை, முந்திரி, பலா மரங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.



சேதமடைந்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும்.



முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூற அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுவை தில்லிக்கு அனுப்ப வேண்டும்.



மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் டாஸ்மாக் பார்களை நடத்த ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 22.7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக