வெள்ளி, 13 ஜனவரி, 2012

பசுபதிபாண்டியன் கொலையைக் கண்டித்து பழ.நெடுமாறன் அறிக்கை

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திண்டுக்கல்லில் கொல்லப்பட்டார். அக்கொலை தொடர்பாக 2 பேர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். அவர்கள் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
     இந்நிலையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், மக்கள் உரிமை கூட்டமை கூட்டமைப்பின் தலைவருமான பழ.நெடுமாறன் அக்கொலை குறித்து தனது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
     தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப்  படுகொலை செய்யப்பட்டிருப்பதைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ள அவர்,
     பசுபதி பாண்டியனின் மறைவு  தென் மாவட்டங்களில் பதற்ற நிலையைத் தோற்றுவித்திருக்கிறது என்றும் அதை தணிக்கவும், படுகொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்கவும், தமிழகக்  காவல்துறை விரைந்து செயல்படவேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக