புதன், 25 ஜனவரி, 2012

முத்துப்பாண்டி த.ம.மு.க., வை சேர்ந்தவர் அல்ல.....நெல்லையப்பன்

திருநெல்வேலி:""பசுபதிபாண்டியன் கொலையில் கைதான திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி, எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை,'' என தமிழக மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் நெல்லையப்பன் தெரிவித்துள்ளார்.ஜான்பாண்டியன் தலைமையில் இயங்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புசெயலாளரான நெல்லையப்பன் கூறியதாவது: முத்துப்பாண்டி, முன்பு ஜான்பாண்டியன் தலைமையில் இயங்கி, தேவேந்திர குல வேளாளர் சங்கத்தில் இருந்தார். பின்னர் அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவராக செயல்பட்டார். ஜான்பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை துவக்கிய பிறகு முத்துப்பாண்டி நெல்லைக்கு வந்ததில்லை. எனவே அவருக்கும் எங்கள் கட்சிக்கும் சம்பந்தமில்லை. அவர் எந்த பொறுப்பிலும் இல்லை, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக