புதன், 11 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை: திருமாவளவன் கண்டனம்

இந்திய மாநிலமான தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன்(10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
இந்த சம்பவத்தை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிப்பதாக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். ஒரு சமூக அமைப்பின் தலைவர் என்கிற முறையிலும் ஒரு அரசியல் பிரமுகர் என்கிற வகையிலும் அவருக்கு காவல்துறையினர் சார்பில் உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு தலித் தலைவருக்கும் அத்தகைய பாதுகாப்பு வழங்குவதில்லை என்கிற நிலையே உள்ளது. ஆகவே தான், இந்தப் படுகொலையும் சமூக விரோதிகளால் மிக இலகுவாக செய்யப்படுகிறது.
பசுபதி பாண்டியன் மறைவால் பெரும் துக்கத்தில் ஆளாகியுள்ள அவரது பச்சிளம் குழந்தைகள் உட்பட உறவினர் யாவருக்கும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது உடலை கட்டுப்பாட்டுடன் நல்லடக்கம் செய்திட அவரது இயக்கத் தொண்டர்கள் முன்வரவேண்டும். அதுவே அவருக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும்.
சமூக விரோதிகள் திட்டமிட்டே நல்லடக்க நிகழ்ச்சியிலும் வன்முறையை தூண்ட முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் நல்லடக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக