புதன், 11 ஜனவரி, 2012

பசுபதிபாண்டியனின் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்

.....தூத்துக்குடி:திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட பசுபதிபாண்டியனின் உடல் நேற்று இரவு அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.






தூத்துக்குடி அருகேயுள்ள அலங்காரத்தட்டு கிராமத்தை சேர்ந்தவர்



பசுபதிபாண்டியன்(51). இவர் தேவேந்திரகுலவேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்



தலைவராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அருகேயுள்ள



நந்தவனப்பட்டியில் வைத்து மர்ம நபர்களால் பசுபதிபாண்டியன் வெட்டி கொலை



செய்யப்பட்டார். அவரது உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பிரேத



பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று



காலை பசுபதிபாண்டியனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம்



தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



பசுபதிபாண்டியனின் உடல் ஏற்றி



வரும் ஆம்புலன்ஸிற்கு பாதுகாப்பாக மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி.,



அஸ்ராகார்க் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் உடன் வந்தனர்.



திண்டுக்கலில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் நேற்று மாலையில் தூத்துக்குடி



மாவட்ட எல்லையான எட்டயபுரம் அருகே வந்த போது ஏராளமான வாகனங்கள் மற்றும்



டூவிலர்களில் சென்ற அவரது ஆதரவாளர்கள் அதனுடன் இணைந்து கொண்டனர்.



பசுபதிபாண்டியனின் உடல் ஏற்றி வந்த ஆம்புலன் ஸ் முதலில் குறுக்குச்சாலையில்



இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அலங்காரத்தட்டிற்கு கொண்டு வர



போலீசார் திட்டமிட்டு இருந்தனர். அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளையும்



செய்திருந்தனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸை தூத்துக்குடி மாநகர்



பகுதி வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். பசுபதிபாண்டியனின் உடல் மாநகர்



பகுதி வழியாக கொண்டு வரப்படுவதை முன்னிட்டு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து



கடைகளும் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான டூவிலர்கள் மற்றும் வாகனங்கள்



புடைசூழ ஆம்புலன்ஸ் மாநகர் பகுதிக்குள் நுழைந்து. ஆம்புலன்ஸ்



அலங்காரத்தட்டிற்கு சென்றவுடன் அங்கு கூடியிருந்த பசுபதிபாண்டியனின்



உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதவாறு இறுதி அஞ்சலி செலுத்தினர்.



பின்னர் அவரது உடல் மனைவி ஜெஸிந்தாபாண்டியன் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை



அருகே அடக்கம் செய்யப்பட்டது. பசுபதிபாண்டியனின் இறுதி நிகழ்ச்சியில்



கலந்து கொள்வதற்காக அவரது தம்பி தாமோதரன் நேற்று மாலை பாளை மத்திய சிறையில்



இருந்து பரோலில் போலீசார் அழைத்து வந்தனர். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில்



புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., நிலக்கோட்டை



எம்.எல்.ஏ.,ராமசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன்,



மள்ளர் இலக்கிய கழக நிறுவனத் தலைவர் சுப.அண்ணாமலை, ஒழுங்கு நடவடிக்கை



கமிஷனர் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்



மாரிச்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழினியன்



மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரளாக கலந்து



கொண்டனர்.





பசுபதிபாண்டியன் கொø ல செய்யப்பட்டதை தொட ர்ந்து நேற்று முன்தினம் இரவு



முதல் அவரது சொந்த கிராமத்தில் ஒருவித பதட்டம் நிலவியதால் திருநெல்வேலி சரக



டிஐஜி.,வரதராஜூலு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.



பசுபதிபாண்டியனின் உடல் அடக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு தாளமுத்துநகர்,



அலங்காரத்தட்டு உள்ளிட்ட இடங்களில் எஸ்.பி.,ராஜேந்திரன் தலைமையில்



சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட



போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக