புதன், 11 ஜனவரி, 2012

தேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் படுகொலை


தேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், இன்று இரவு 9 மணியளவில் திண்டுக்கல் பக்கம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி பக்கமுள்ள தாளமுத்து நகர். இங்குதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்ட இவரது மனைவி வழக்கறிஞர் ஜசீந்தா பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அந்த பெயரில் தனிப்பட்டியல் உருவாக்க வேண்டுமென தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் இவர் வலியுறுத்தினார்.
பசுபதி பாண்டியன், தென்தமிழகம் நன்கு அறிந்த தலித் சமுதாய தலைவர். ஆரம்பத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைந்து செயல்பட்டவர். அம்மன்புரம் வெங்கடேச பண்ணையாருடன் (திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் கணவர்) ஏற்பட்ட மோதல்களின் காரணமாக திண்டுக்கல் சென்ற இவர், கடந்த சில வருடங்களாகவே, மீண்டும் தென் மாவட்டங்களில், தனது சமுதாய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வந்தார். பல்வேறு அரசியல் ரீதியான போராட்டங்கள், உண்ணாவிரதம், பொதுக்-கூட்டம் என்று தலித் சமுதாய மக்களின் கவனத்தைத் தன்பால் மீண்டும் திருப்பிவிட முயன்றார்.

Video taken in Nakkasalem_perambalur district: Dhevendra kula vellaalar commuinty board and flag hosting with Maaveeran. Pasupathi Pandian on 22.08.2010.




தேவேந்திர-குல வேளாளர் கூட்டமைப்பு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராம-நாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய 7 தொகுதிகளில் ஜாதி செல்வாக்குடன் இருக்கிறது.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும் என்றும் பசுபதி பாண்டியர் போராடினார்.

சி. பசுபதி பாண்டியன் பேச்சில் இருந்து:
“எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.
எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.
தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக