புதன், 11 ஜனவரி, 2012

பசுபதிபாண்டியன் கொலை த.ம.மு.க., இரங்கல்

திருநெல்வேலி:பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய
வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன்
தெரிவித்தார்.தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன்
அறிக்கை:தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை
செய்யப்பட்டதை அறிந்து துயரம் அடைந்தேன். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு
பாடுபடும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸ் துறை, அரசு அலட்சியமாக
பொறுப்பற்று செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.இச்சம்பவத்தில்
தொடர்புடையவர்கள் உடனே கைது செய்யப்பட வேண்டும். பசுபதிபாண்டியன் மறைவு
தேவேந்திர குலத்திற்கு பேரிழப்பு. தேவேந்திரகுல மக்கள் கிராமங்களில் சமுதாய
கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும்.இவ்வாறு ஜான் பாண்டியன்
தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக