வியாழன், 13 செப்டம்பர், 2012

கமுதி அருகே மோதல்: ஊராட்சி முன்னாள் தலைவர் பெண்கள் உள்பட 31 பேர் மீது வழக்கு


கமுதி, செப். 12: செவ்வாய்க்கிழமை கமுதி அருகே நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று நடைபெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாக, ஊராட்சி முன்னாள் தலைவர் மற்றும் பெண்கள் உள்பட 31 பேர் மீது, போலீஸôர் தனித்தனியே 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
பெருமாள் குடும்பன்பட்டி, ஆசூர், முஷ்டக்குறிச்சி ஆகிய ஊர்களைச் சேர்ந்த தலீத் சமூகத்தினர், இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, முஷ்டக்குறிச்சியிலிருந்து வாகனங்களில் பரமக்குடிக்கு புறப்பட்டனர். முன்னதாக இவர்கள், முஷ்டக்குறிச்சியில் கோஷமிட்டபடி நடந்து சென்றதற்கு வேறொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களை மாறி மாறி வீசித் தாக்கிக் கொண்டனர். இதில், இரு தரப்பிலும் வெள்ளையம்மாள் மற்றும் பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி-ஆனைமலை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் 2 போலீஸôர் காயம் அடைந்தனர். இது குறித்து, கமுதி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் அளித்த புகாரின்பேரில், முஷ்டக்குறிச்சி முத்துராமலிங்கம் மனைவி வெள்ளையம்மாள் (42), கந்தவேல் உள்பட பெயர் குறிப்பிட்ட 10 பேர் மற்றும் பலர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பெருமாள் குடும்பன்பட்டி கண்ணுச்சாமி மகன் பொன்னுச்சாமி (29) அளித்த புகாரில், முஷ்டக்குறிச்சி வெள்ளையம்மாள் உள்பட பெயர் குறிபிடப்பட்ட 10 பேர் மற்றும் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வெள்ளையம்மாள் கொடுத்த புகாரில், பெருமாள் குடும்பன்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் பெருமாள், நாகராஜன் உள்பட பெயர் குறிப்பிடப்பட்ட 11 பேர் மற்றும் பலர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்துல்லா, கோபிநாத், பிரேம் ஆனந்த் ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் உத்தரவில், ஏ.எஸ்.பி. அபிநவ் குமார் நியமித்துள்ளார். இதையடுத்து, குற்றவாளிகளைத் துரிதமாகக் கைது செய்ய, தனி போலீஸ் படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக