செவ்வாய், 25 ஜூன், 2013

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு :


மேலவை தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு  புதிய தமிழகம் ஆதரவு அளிக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள 6 பேருக்கான மேலவை தேர்தலில் அ.தி.மு.க. 4 வேட்பாளர்களையும், அ.தி.மு.க.வின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூலம் 5-வது வேட்பாளரையும் நிறுத்தியுள்ளன. 6-வது வேட்பாளராக தி.மு.க.வின் சார்பில் கனிமொழியும் தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் களத்தில் உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த மனிதநேய மக்கள் கட்சி நேற்று தி.மு.க.வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. இச்சூழலில் அக்கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியான புதிய தமிழகமும், தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிகின்றது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பார் தகவல் கசிந்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க.வின் எண்ணிக்கை 27 ஆக உயரும்.  5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் பட்சத்தில் தி.மு.க.வின் பலம் 32-ஆக உயர்ந்து கனிமொழியின் வெற்றி உறுதியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக