வெள்ளி, 21 ஜூன், 2013

ஒரு புத்தகத்தைத் தடை செய்வது எப்படி




மீண்டெழும் பாண்டியர் வரலாறு:-

உயர்திரு கு செந்தில் மள்ளர் அவர்களின் 7 ஆண்டு கால உழைப்பில் குடிமரபியல் ஆய்வு முறையில் 625 பக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் பாண்டியரை தேடி... என்னும் மீண்டெழும் பாண்டியர் வரலாறு


புத்தகத்தில் வெளியிடப்பட்ட பதியப்பட்ட பள்ளர்களே பாண்டியர்கள் என்றும் அதன் வரலாற்று ஆவணங்களும் வரலாற்று பதிவுகளும் உண்மைக்கு புறமாணது என்று அவர்கள் தடை வாங்கவில்லை

புத்தகத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்களை இது வரை எந்த ஒரு சமுதாய அமைப்பும் அரசியல் அமைப்பும் மறுக்கவில்லை.

புத்தகம் வெளியிட தடை:-

ஜெயந்திரநாத் ஸ்வைன் முதன்மைசெயலாளர் (பொது) இந்த புத்தகத்தை தடை செய்து கூறும்போது " இந்த புத்தகம் ஆதாரங்களை திரித்தும், தவறுதலாக குறிப்பிட்ட சாதியை குற்றம் சுமத்தியும் எழுதப்படிருக்கிறது" என்றார்.

மேலும் இந்த தடை உத்தரவில் குறிப்பிட்டவைகள் " இந்த புத்தகம் தவறலான ஆதரமற்ற புனைவாக இருக்கிறது மேலும் பெரும் தலைவர்கள் "பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் மற்றும் காமராஜர்" போன்றவர்களை திரித்த பொய்யான வரலாற்றுடன் தவறாக குறிக்கிறது". "அழகுமுத்துகோன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களை இந்த புத்தகம் எதிரிகளாகவும் அந்நியர்களாகவும் சித்தரிக்க முயல்கிறது.சாதியை குறிப்பிட்டு காழ்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது,அதனால் இப்புத்தகம் தடை செய்யப்படுகிறது"

இந்த புத்தகம் "The book under section 95 (1) (a) of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974)" தடை செய்யப்படுகிறது" இனி இந்த புத்தகத்தை விறபனை செய்யவோ,மறுபதிப்பு செய்யவோ,மொழிமாற்றம் செய்யவோ கூடாது அவ்வாறு செய்தால் சட்டப்படி கடுமையான குற்றமாகும்.
ஒரு புத்தகத்தைத் தடை செய்யலாமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்து சுதந்தரத்துக்கும் பத்திரிக்கை சுதந்தரத்துக்கும் உத்தரவாதம் அளிப்பது  உண்மை. அதே சமயம்,எதை வேண்டுமானாலும் ஒருவர் எழுதிவிடவும் முடியாது. ஒரு சாராரின் மத நம்பிக்கைக்கு  குந்தகம் ஏற்படுத்துகிறது என்றோ, தேச விரோதமானது என்றோ ஒருவருடைய மதத்தை அவதூறு செய்கிறது என்றோ,  ஆபாசமானது என்றோ கருதப்படும் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுவிடமுடியாது. அவ்வாறு செய்வது இந்திய  தண்டனைச்  சட்டத்தின் 124அ, 153அ, 153ஆ, 293 மற்றும் 295அ பிரிவுகளின்படி குற்றங்களாகும். குற்றம் நிரூபிக்கப் பட்டால், குற்றத்துக்கு ஏற்றவாறு அபராதம் தொடங்கி, மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனை  வரை வழங்கமுடியும்.
எப்படி தடை விதிப்பது? விதித்தால் எப்படி எதிர்கொள்வது?
‘புத்தகத்தின் ஓரிரண்டு வரிகளை மட்டும் படித்துவிட்டு,தேசவிரோதமானது, மத நம்பிக்கைக்கு எதிரானது என்ற  முடிவுக்கு வரக்கூடாது!’ SHIVAJI: HINDU KING IN ISLAMIC INDIA  என்ற புத்தகத்தின் மீதான  தடையுத்தரவை நீக்கி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் இடம்பெற்ற வாசகம் இது.
ஒரு புத்தகத்தின்மீது அரசாங்கத் தடை விதிக்கப்பட்டால், தடை செய்யப்பட்ட புத்தகத்தை வைத்திருப்பவரோ,  நூலாசிரியரோ அல்லது வெளியீட்டாளரோ சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகி, அரசாங்கத்தின் தடை உத்தரவு  செல்லாது என்று மனு தாக்கல் செய்யலாம்.
மனுவை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும். இந்த விசாரணையின் அடிப்படையில்  தடை நீக்கப்படலாம். ஆனால், பணத்தைச் செலவழித்து, நீதிமன்றத்தை அணுகி, பல காலம் காத்திருக்கவேண்டியிரு க்கும். இதற்குத் தயங்கி, தடை செய்யப்பட்ட நூல்களைச் சிலர் இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். காரணம்,  இணையத்தில் வெளியாகும் புத்தகங்களைத் தடை செய்வதற்கு இன்னும் போதுமான சட்டங்கள் இயற்றப்படவில்லை.
எந்த ஒரு அரசாங்கமும் ஒரு புத்தகத்தை பறிமுதல் செய்வதற்கான உத்தரவை வெளியிடுவதற்கு முன்னர், அந்தப்  புத்தகம் எதற்காக எழுதப்பட்டது, அந்தப் புத்தகத்தை எழுதியவரின் நோக்கம் என்ன,  புத்தகத்தின் மொழி நடை எப்படிப்பட்டது, புத்தகம் தெரிவிக்கும் கருத்து என்ன ஆகிய அனைத்தையும் பரிசீலனை செய்யவேண்டும்.
தடை செய்யப்பட்ட புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசிப்பது அல்லது அந்த புத்தகத்தை வைத்திருப்பது சட்டப்படி  குற்றமா?
தடை செய்யப்பட்ட பிரசுரங்களை அல்லது ஆவணங்களைக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95 வது பிரிவின்படி Notification வெளியிட்டு பறிமுதல் செய்யலாம். அதற்கு முன்னால் பறிமுதலுக்கான காரணத்தைத்  தெரிவிக்கவேண்டும். அவ்வாறு செய்துவிட்டால், தடை செய்யப்பட்ட பிரதியை இந்தியாவில் எங்கு பார்த்தாலும்  தடை செய்யலாம்.
சம்பந்தப்பட்ட பிரதிகள் எங்கேனும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிய வந்தால்,  சம்பந்தப்பட்ட அதிகார வரம்பு கொண்ட மாஜிஸ்டிரேட்டிடம் தேடுதல் வாரண்ட் பெற்றுக்கொண்டு, சந்தேகத்துக்கு  உண்டான எந்த இடத்திலும் புகுந்து தேடலாம், பறிமுதல் செய்யலாம்.
குறிப்பிட்ட புத்தகம் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டால், அந்தப் புத்தக ங்களைச் சுங்க இலாகாவினர் இந்தியாவுக்குள் நுழையவிடாமல் தடை செய்யமுடியும் என்று இந்திய சுங்க சட்டத்தின் 11 ஆம் விதி தெரிவிக்கிறது.
மற்றபடி, தடை செய்யப்பட்ட புத்தகத்தை வைத்திருப்பதோ அல்லது அந்தப் புத்தகத்தின் இலக்கியத் தன்மையைப்  பறைசாற்றும் விதத்தில் புத்தகத்திலிருந்து சில பத்திகளை வாசித்து காட்டுவதோ குற்றமாகாது. (சட்ட விரோதமான  முறையிலோ, ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையிலோ, ஆபாசமாகவோ எழுதப்படாமல் இருக்கவேண்டும்). வாசி ப்பவரின் கையிலிருந்து சம்பந்தப்பட்ட பிரதியைப் பறிமுதல் செய்வதே அதிகபட்ச நடவடிக்கையாக இருக்கமுடியும்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள்:
கடந்த 100 ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் (அனைத்தும் ஆங்கில மொழியில் வெளிவந்தவை) இந்திய õவில் தடை செய்யப்பட்டுள்ளன. பட்டியல் கீழே.
1.    Rangila Rasool (ரங்கீலா ரசூல்),  தடை செய்யப்பட்ட வருடம் 1927. ராமாயண  சீதையைத் தரக்குறைவாகச் சித்தரித்து வந்த பிரசுரத்துக்குப் பதிலடியாக, ஆரிய சமாஜைச் சேர்ந்த குமார் பிரசாத் பிரீத்  எழுதியது.
2.    Angaray,  தடை செய்யப்பட்ட வருடம் 1932,  புத்தகத்தை எழுதியவர் ஷஜத் சாகிர்.
3.    Nine Hours to Rama – தடை செய்யப்பட்ட வருடம் 1962. எழுதியவர் Stanley Wolpert. மகாத்மா காந்தி கொல்லப்படும் சமயத்தில், அவருக்குப் பாதுகாப்பு அளிக்க÷ வண்டியவர்கள் எவ்வாறு கவனக்குறைவுடன் இருந்தனர் என்று தெரிவிக்கும் புத்தகம்.
4.    Unarmed victory, தடை செய்யப்பட்ட வருடம் 1963. எழுதியவர் பெர்ட்ரண்ட்  ரஸல். சீனா  இந்தியா  யுத்தத்தைப் பற்றியது.
5.    Understanding Islam through Hadis,  தடை செய்யப்பட்ட வருடம் 1982. எழுதியவர் ராம் ஸ்வரூப்.
6.    Smash & Grab  தடை செய்யப்பட்ட வருடம் 1984. சுதந்தரமாக இருந்த சிக்கிம் பகுதியை இந் தியா எப்படி தன்னுடன் சேர்த்துக்கொண்டது என்பதைப் பற்றிய புத்தகம். எழுதியவர் சுனந்தா தத்தா ராய்.
7.    The Satanic Verses,  தடை செய்யப்பட்ட வருடம் 1988,  எழுதியவர் சல்மான்  ருஷ்டி.
8.    Soft Target  – தடை செய்யப்பட்ட வருடம் 1989. இந்திய உளவுத்துறை எப்படி கனடா  நாட்டில் நுழைந்தது என்பதை விவரிக்கும் புத்தகம். எழுதியவர்கள் Zuhair Kashmeri & Brian McAndrew
9.    Lajja, தடை செய்யப்பட்ட வருடம் 1993  எழுதியவர் தஸ்லிமா நஸ்ரின்.
10.    The true furqan – தடை செய்யப்பட்ட வருடம் 1999  குர்ஆனுக்கு கிறித்துவ  வடிவம் கொடுத்த புத்தகம்  எழுதியவர்கள் Al Saffee, Al Mahdee.
11.    Islam a concept of political world invasion, தடை செய்யப்பட்ட வருடம் 2007  எழுதியவர் R. V. Bhasin.
12.    The Great Soul,  குஜராத்தில் தடை செய்யப்பட்ட வருடம்  2011. எழுதியவர் Joseph Lelyveld  . காந்தி  ஓரினச் சேர்க்கையாளர், இனவெறியர் என்பதாகச் சொல்லும் சில பகுதிகள் இடம்பெற்றன என்னும் குற்றச்சாட்டின்  அடிப்படையில் தடை செய்யப்பட்டது.
13.    Jinnah: India Partition Independence – எழுதியவர்  ஜஸ்வந்த் சிங்  தடை செய்யப்பட்ட வருடம் 2009. குஜராத் அரசு விதித்த தடையை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து  செய்துவிட்டது.
14.    Shivaji: Hindu King in Islamic India  – எழுதியவர் ஜேம்ஸ் லெயின்   மகாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட வருடம் 2004  இந்திய உச்ச நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக