வியாழன், 25 ஜூலை, 2013

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

திருநெல்வேலி: நெல்லை ஆற்றங்கரையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவுத்தூண் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மாஞ்சோலை, வால்பாறை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 10 லட்சம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கேட்டு நெல்லையில் 99ம் ஆண்டு நடந்த பேரணி மீது போலீசார் தடியடி நடத்தியதில் 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். தொழிலாளர்கள் பலியான நாளில் 14 வது ஆண்டாக அஞ்சலி செலுத்தி வருகிறோம்.நாட்டிலேயே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக போராடியது புதிய தமிழகம் கட்சி மட்டுமே. தியாகங்களுக்கு விலை இல்லாமல் போகாது. மக்களுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம்.நெல்லை ஆற்றங்கரையில் தொழிலாளர்கள் உயிர்நீத்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க இடம் ஒதுக்க அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.புதிய தமிழகம் - புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மேதினம், 2010 ல் இணையத்தொலைக்காட்சிக்காக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக