வியாழன், 25 ஜூலை, 2013

நெல்லை தாமிரபரணி ஆற்றில் பலியானவர்களுக்கு டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் அஞ்சலி

1999–ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் பேரணி நடைபெற்றது. அப்போது நடந்த கலவரத்தில் நடத்தியதில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் பலியானார்கள்.

புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,அவர்கள் தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாரமிபரணி ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான போராட்டம் நடத்தினோம். அப்போது போலீசாரின் தாக்குதலில் ஒரு வயது விக்னேஷ் உள்பட 17 பேர் உயிர் நீத்தனர். அவர்களுக்கு தொடர்ந்து 14 வருடங்களாக அஞ்சலி செலுத்தி வருகிறோம். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக முதல்முதலில் குரல்கொடுத்தது புதியதமிழகம் கட்சி தான். அந்த கோரிக்கையை வென்று எடுப்பதே எங்களுடைய லட்சியம், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் அனைவருக்கும் சம அந்தஸ்துவேண்டும். எங்களுக்கு உரிய உரிமையை பெறவேண்டும் என்பதே எங்களுடைய லட்சியாகும். தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த 17 பேர்களுடைய நினைவாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். அரசுகள் செய்யவில்லை. எங்கள் சொந்த செலவில் மணிமண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கித்தரவேண்டும்.’’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக