சனி, 21 செப்டம்பர், 2013

தென் தமிழகத்திலே சாதி வெறி அதிகம் சாதி கொலை அடித்தடி அதிகம்..இங்க பாண்டியானர்கள் அவசியம்.

தோழி விக்டோரிய (தேவேந்திர குல வேளாளர் பற்றிய ஆய்வு செய்யும் முனைவர் பட்டத்துக்கான மாணவி) அவர்களுடன் நாடந்த சிறு உரையாடல் உங்க கவணத்திற்கு..

நாங்க : வணக்கம் தோழி

விக்டோரிய : வணக்கம் (பிள்ளை தமிழ்)

நாங்க : நீங்க எந்த நாடு?

விக்டோரிய : நான் ஆமேரிக்கா 

நாங்க : சுற்றுலா வந்தீங்களா?

விக்டோரிய : இல்லை நான் என் பி.கச்.டி (Phd) படிப்பிற்காக வந்து இருக்கேன்..

நாங்க : எந்த துறை அங்கு பி.கச.டி க்கு இங்க என்ன வேலை??

விக்டோரிய : ஆதாவது நான் தமிழ் குடி பற்றிய ஆய்வு செய்கிறேன்..அதிலும் குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் என்றும் மள்ளர் என்றும் குடும்பமார் என்றும் பள்ளர் என்றும் சொல்லப்படுகிற ஒரு தமிழ் இனத்தை பற்றி ஆய்வதற்காக வந்தேன்.. 

நாங்க : நீங்க எந்த பல்கலைகழகம்?? இங்க எப்படி?

விக்டோரிய : நான் கலிப்போர்னியா பல்கலைகழகம்.. அங்க இருக்கிற மார்ட்டின் என்ற ஆசிரியர் இங்கு இருக்கிற காமராஜ் பல்கலைகழக நாகராஜ் என்ற ஆசிரியரின் உதவியுடன் என் ஆய்வை முடிக்க இங்க கடந்த முன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறேன்..

நாங்க : சரி...இமானுவேல் சேகரனார் பற்றி என் எழுத போரிக்க?? இதுவரை என்ன ஆய்வு பன்னிருக்கிங்க.. தோழி

விக்டோரிய : ஆதாவது தோழர் ( சிரிப்பு) நான் சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனார் படுகொலைச் செய்யப்பட்ட பின் முன் என்ன மாற்றும் நிகழ்ந்து இருக்குனு 
அப்புறம் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகம் எப்படி மன்னர் என்ற நிலையில் இருந்து பள்ளர் என்றும்..விசவாயம் முதல் போர் வரை செய்தாங்க என்றும் 
இப்போ அவங்க அரசியல் நிலை..சமூக நிலைப் பற்றி குறிப்பு இருக்கு (எடுத்து வைத்து இருக்காங்க)..

நாங்க : இந்த ஆண்டு வீரவணக்க நாள் எப்படி இருக்கு??

விக்டோரிய : பரவாஇல்லை என்று தான் சொல்ல வேண்டும்..முன்னின ஆண்டுகளில் இருந்ததை விட இந்த ஆண்டு ரெம்ப ஆள்கள் குறை னு தான் சொல்லனும்..போன ஆண்டு 8 லட்சம் பேர் வந்து இருப்பாங்க னு நீனைக்கிறேன்..இந்த ஆண்டு 80000 பேர் வந்தாலே ஆது பெரிய வெற்றி தான் னு நினைக்கிறேன்..

நாங்க : நீ டாக்டர் கிருஷ்ண சாமி பற்றி கேள்வி பட்டுருப்பீங்க அண்ணன் பசுபதி பாண்டியம் ஜான் பாண்டியன் பற்றி கேள்வி பட்டுருப்பீங்க இது யார் பெரியவங்க??

விக்டோரிய : சென்னை மற்றும் பெரும் நகரத்துல படிச்சவங்க அதிகம்..அங்க டாக்டர் படிச்சுக்காரு..அரசியல் தெரிந்தவர்..எம்எல்ஏ வாக இருந்தவர் அவர்கள் அங்கே இருக்கிற சமூக உறவுகளை ஒன்றினைத்து சமூக வளர்ச்சிக்கு போராட உதவ வைக்க முடியும்..அங்க பசுபாதி மற்றும் ஜான் பாண்டியனார்கள் தேவை குறைவு..ஆனால் இங்கு தென் தமிழகத்திலே சாதி வெறி அதிகம் சாதி கொலை அடித்தடி அதிகம்..இங்க பாண்டியானர்கள் அவசியம்..கண்டிப்ப தேவை னு நான் சொல்லுவேன்..

ஆதாவது தேவைப்படும் போது டாக்டர் அரசியல் பலத்தை பாண்டியனார்களுக்கு கொடுக்கனும்.. பாண்டியனார்கள் தேவைப்டும் போது டாக்டர்க்கு தோழ் கொடுக்கனும்..அப்போதான் இந்த சமூகம் சாதிய வெறிக்கு எதிர்த்து நிலைக்க முடியும்..

நாங்க : இமானுவேல் சேகரனார் பற்றி என்ன நீனைக்கிறீங்க??

விக்டோரிய : நீங்க வார்த்தைக்கு வார்த்தை இமானுவேல் னு சொல்லாதீங்க.. சாதி ஒழிப்பு போராளினு இமானுவேல் சேகரனார் என்று சொன்ன என்ன ?? (சிரிப்பு)

நாங்க : மன்னிக்கனும் ஐயா பற்றி உங்க கருத்து??

விக்டோரிய : அவரு முன்னால் ரானுவ வீரர்..தன் கிட்ட இருந்த 50 ஏக்கர் நிலத்தை வித்து ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பணிக்க செலவு செய்தவர்..கிரேட் கர்க்கன் கூட நெருங்கிய நண்பர்.. தென் இந்தியவின் பகத்சிங்.. சாதி ஒழிப்பு போராளி.. சாதி கடந்த மக்களால் நேசிக்கப்படுபவர்..அவர் படுகெலை செய்துவிட்டாங்க அவர் எழுச்சின் தாயகம் இன்னும் இருக்கு....

நாங்க : தமிக அரசியல் பற்றி??

விக்டோரிய : ரெம்ப கஷ்டமா இருக்கு நான் படித்த அரசியல் வேறு இங்கு நடக்குறது வேறு..எங்கு பார்த்தாலும் சாதி அரசியல் சாதி பார்வை..அரசு வன்முறை..பாருங்க வாடக வண்டி இல்ல அரசு பஸ் வழக்கமா வருகிற வண்டி கூட எந்த காரணமும் இல்லாமல் நீறுத்திடாங்க...ஆனா மாலை போட மட்டும் ஆள் ஆனுப்புவாக..கேவலமாக இருக்கு..போராளிகளுக்கு இப்படினா பின்ன மக்களுக்கு?? உங்களுக்கு தெரியாதா..

நாங்க : இறுதியா ஒன்று நான் உங்க கூட ஒரு புகைப்படம் எடுக்கலாமா??

விக்டோரிய : (சிரிப்பு) சரி வாங்க..

நாங்க : அடுத்த ஆண்டு சந்திகலாம்...

விக்டோரிய : ஆது முடியாது என் கால அளவு முடிந்துபோச்சு..வணக்கம் தோழர் (பிள்ளை தமிழ்)

நாங்க : நன்றி...வணக்கம் தோழி (அவங்க பிள்ளை தமிழில் நாங்க) சிரிப்பு..

நன்றி --தோழர் கனகவேல் ராஜன் மு.பா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக