வெள்ளி, 20 செப்டம்பர், 2013

தேசம் செலுத்தும் வீர வணக்கம் ……. தந்தை பெரியாருக்கு .........


1957 ல் முதுகுளத்தூரில் பெரும் கலவரம் வெடித்தது ; அக்கால கட்டத்தில் வலிமையான சாதி ஆதிக்க வாதிகள் இருந்த நிலையில் – எந்த ஒரு கட்சியும் – ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு குரல் கொடுக்க தயாராக இல்லை.

பெரியாரும் ‘விடுதலை’ நாளேடும் மட்டும் தான் – உறுதியாக – சாதி ஆதிக்க சக்திகளை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது. கலவரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை அரசு கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று காமராசர் ஆட்சிக்கு வேண்டுகோள் விடுத்த தந்தை பெரியார், “ இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நானே போராட்டத்தில் குதிப்பேன் ” என்று அறிக்கை விடுத்தார்

தந்தை பெரியார், தியாகி இமானுவேல் சேகரன்- சாதியில்லா சமுதாயத்தை படைக்க முயன்ற மாபெரும் தலைவர்கள் – சாதி ஒழிப்புப் போரில் களத்தில் நிற்கும் போராளிகளூக்கு – வழிகாட்டும் ஒளி விளக்குகள் !

தந்தை பெரியாருக்கு சிரம் தாழ்ந்த வீர வணக்கம்

உணர்வுடன் ...
தேசம் ஒருகிணைப்பு குழு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக