சனி, 12 அக்டோபர், 2013

தேவேந்திரர்கள் தலித்துகளா???



தேவேந்திரர்கள் தலித்துகளா???

தேவேந்திரர்கள் தலித் என்ற வார்த்தைக்கு ஒவ்வாதவர்கள் என்று எண்ணற்ற பல சான்றுகளுடன் வரலாற்றுப்பூர்வமாக மெய்பித்தாகிவிட்டது அது போக தேவேந்திரர்கள் தலித் தான் என்ற உண்மை ஆதாரத்தை எவரேனும் சமர்பித்தால் அவர்களிற்கு பத்து லட்சம் பரிசுத்தொகையும் அறிவித்தும் பார்த்தாச்சு ஒரு பயலுக்கும் திராணி இல்லை எம்மை தலித் என்று உறுதிபடுத்த பிறகெப்படி சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர் மரபினரான யாம் தலித்துகள் ஆவோம்.

இந்து மனுதர்ம வரனாசிரம கோட்பாட்டின் படி சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் என இரு வகையாக பிரித்து இட ஒதுக்கீட்டிர்காக BC, SC என இரு வகையாக பிரிக்கப்பட்டு பட்டியல் இனம் தயாரிக்கப்படுகிறது அந்த பட்டியல் இனத்தில் 76 சாதிகள் சேர்க்கப்படுகிறது அதில் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரு சாதியை தவிர்த்து மற்ற சாதிகள் அனைத்தும் சலுகைகளை எதிர்நோக்கும் சமூகமாக விரும்பி பட்டியல் இனத்தை ஏற்றுக்கொள்கிறது. அனால் ஆண்ட அரசுடமை சமூகமான தேவேந்திர இனம் வீழ்த்தப்பட்ட பிறகு நிலசுவாந்தாரர்களாய் இருந்த தேவேந்திரர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு கூலி தொழிலாளியாய் தன்னுடைய வழ்வாதறதிற்கு பிறரை சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்படிருந்த என் சமூகத்தின் அன்றைய பொருளாதார நிலையை மட்டும் கருத்தில் கொண்டே எம்மையும் திணித்திருகின்றனர் பட்டியல் இன சாதியாய் தலித்தாய். 

ஆண்ட இனம் வீழ்த்தப்பட்டு தாழ்த்தப்பட்டோர் ஆகியும் அங்கேயும் சும்மா இருக்கவில்லை சலுகைகளை எதிர்நோக்கிய மற்ற சாதிகளுக்காக சலுகைகளை எதிர்நோக்கும் சமூகமாக இராதே அது நிரந்தரமானது அல்ல உங்கள் உரிமை என கேள் அதுவே உனக்கு என்றும் நிரந்தரம் என்று யாம் போராடியதன் பயனை மற்ற பட்டியல் இன சாதிகள் பல துறைகளில் பலவாறு எம்மால் பயன்பெற்றதை எவரும் மறுக்க முடியாது. எங்கெல்லாம் அடக்குமுறை தலைதூக்கியதோ அதையெல்லாம் அறுத்தெறிந்த பெருமை எம் தேவேந்திரகுலத்தையே சாரும். அப்பேற்பட்ட வீரம் என்ற சொல்லிற்கு இலக்கணமான தேவேந்திரகுலம் எப்படி தலித் என்ற வட்டத்திற்குள் வரும். இன்றளவும் சலுகைகளுக்காக பட்டியல் இனத்திற்குள் வர பல சாதிகள் போராடிக்கொண்டிருகையில் இந்திய வரலாற்றிலேயே பட்டியல் இனத்தில் இருந்து எங்களை வெளியேற்றுங்கள் என்று போராடுகிரதென்றால் அது தேவேந்திர குலமாக மட்டும் தான் இருக்க முடியும் அப்பேற்பட்ட வரலாற்றுபின்னணி கொண்ட சமூகம் எப்படி தலித்தாக இருக்க முடியும் மூடர்களே சிந்தியுங்கள் யார் தலித் என்று???

முதலில் யாரெல்லாம் தலித் என்று பாப்போம்...

1: மாட்டு இறைச்சி உண்பவர்கள் 

2: தீண்டத்தகாதவர்களாக ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள் 

3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள்

4. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள் 

5. வறுமையில் உழன்றுகொண்டு SC பட்டியலில் இருப்பவர்கள்

6.இறந்தவர்களை புதைப்பதை தொழிலாக கொண்டவர்கள் 

மேற்கண்ட தலித்துகள் என்ற அந்த வரையறைகளுக்கு எவ்வாறு பொருந்தாதவர்கள் தேவேந்திரர்கள் என்பதை கீழே பாப்போம்:

1. விவசாயத்தை குலதொழிலாக கொண்டு மாடுகளை உழவு எந்திரமாக பயன்படுத்தும் தேவேந்திரர்கள் ஒரு போதும் மாட்டிறைச்சியை உண்பதில்லை

2. தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே தேவேந்திரர்கள் தான். ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர், சானார், சக்கிலியர் போன்ற இன்னும் சில மக்களுக்காக. தேவேந்திரர்களுகாக அல்ல

3. தேவேந்திரர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள் 

4. பூமி பூஜை முதல் திதி வரையுள்ள அனைத்து தேவேந்திரர்களின் சுப/கெட்ட நிகழ்வுகளிலும் பிராமணர்களை தேவேந்திரர்களின் வீடுகளிலும் பூஜைகளிலும் பார்க்கலாம்

5. இன்றைய தேவேந்திரர்களின் பொருளாதார நிலை பல சாதி இந்துக்களின் நிலையைவிட பன்மடங்கு உயர்நிளையிலையே இருக்கிறது அது போக தேவேந்திரர்களின் உட்பிரிவுகளான மூப்பர் (BC 65) , காலாடி (BC 35) (DNC 28), பண்ணாடி (MBC 16) இல் இருக்கிறார்கள எனவே பட்டியல் இனத்தில் இருபதனால் மட்டுமே தேவேந்திரர்கள் தலித்துகள் என்றால் எம்மின் உட்பிரிவுகள் எல்லா பிரிவுகளிலும் இருக்கும் போதே தெரியவில்லையா தேவேந்திரர்கள் தலித்துகள் அல்ல என்று???

6. தேவேந்திரர்களின் குல தொழில் விவசாயம் தேவேந்திரர்களை புதைப்பதற்கே பல ஊர்களில் மற்ற சாதியினரை தான் பயன்படுத்துகின்றனர். 

எனவே தலித் என்ற வரையறைக்குள் சிறிதும் பொருந்தாத தேவேந்திரர்களை “தலித்” என்று வழங்குவதன் நோக்கம் என்ன? 

மனித இனம் அடிக்கடி தன்னைப் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்கிறது என்று சரித்திரம் நமக்கு பல முறை பல சமூகங்கள் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறது. அதே போல் தான் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கும் இன்று தம்மை யார் என்று சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எமது வரலாறுகள் சான்றுகளுடன் உங்களின் காலடியில் அதை எடுத்து ஆளும் அரசுகளிடம் சமர்பித்து தலித் என்ற இழிசொல்லை எம் சமூகத்திற்கு ஒவ்வாத ஒன்றாக மாற்றுவது எம் ஒவ்வொருவரின் கடமை.

நியாயத்தின் அடிப்படையில் தாக்கு! வன்முறை மூலம் தற்காத்துக் கொள்!! என்ற தோழர் சியாங் சிங்கின் வார்த்தைகளுக்கு இணங்க உன்னுடைய அறிவுபூர்வமான செயல்பாடுகளால் ஆளும் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து அங்கீகரிக்க வை எமது வரலாறு அங்கீகரிக்கப்பட்ட அடுத்த கணம் எம்மேல் படிந்திருக்கின்ற தலித் என்ற இழிசொல் துடைத்தெரியப்படிருக்கும் அந்த நாள் எம் சமூகத்திற்கான விடுதலை நாள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக