வெள்ளி, 29 நவம்பர், 2013

மள்ளரிய தந்தை வரலாற்று ஆய்வு செம்மல் அய்யா தேவ ஆசிர்வாதம் பெயரில் விருது...

நவம்பர் 27-மாவீரர் நாளில் கடலியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களுக்கு மள்ளரிய தந்தை வரலாற்று ஆய்வு செம்மல் அய்யா தேவ ஆசிர்வாதம் பெயரில் விருது தமிழினவேந்தர் தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள் விருது வழங்கினார். தமிழர் ஆய்வு நடுவம் இந்நிக்வை ஒருங்கிணைத்திருந்தது. இந்நிகழ்வில் தனது ஆய்வு ஆவணத் தரவுகளை காணோளி மூலம் ஒரிசா பாலு அவர்கள் விளக்கினார்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கப்பட்ட ஆவணப்படத்தை தமிழினவேந்தர் முழுமையாக பார்த்தார். இதில் பேசிய ஒரிசா பாலு அவர்கள் தான் மாற்று சமூகமாக இருந்தாலும் இந்த ஆய்வின் மூலம் உலகெங்கும் பல நாடுகளில் மருதநில மக்களான மள்ளர் மக்களான பள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளை கண்டறிந்தது தனக்கு மனநிறைவை தருவதாக சொன்னார். உலகம் முழுவதும் விவசாயத்தை மூத்த தமிழ்குடிகளான மருதநில தமிழர்கள்தான் கொண்டுசென்றதாக தனது ஆய்வு நிருபித்திருக்கிறது என்றார். மருதநில மக்களான தமிழர்கள்தான் நாகரீகத்தின் தோற்றுவாய் என்றார். தமிழகத்தில் பல்வேறு சாதிகளாக அழைக்கப்படும் சாதியினர் மருதநில மக்களான பள்ளர்களே என்றார். இதை மருதநில மக்கள் உணராது தாழ்வு மனப்பாண்மையோடு வரலாறு அறியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். முதன் முதலில் மருதநிலமக்களின் தாழ்வு மனப்பாண்மை உடைத்தெரிரிய உயிர்பபலியானவர் தியாகி இமானுவேல் சேகரன் , அவர் வழியில் மருதநில மக்களான தமிழர்களை தலைநிமிரச் செய்தது தலைவர். பெ.ஜான்பாண்டியன் என்று ஒரிசா பாலு கூறினார். நிகழ்வில் கலந்துகொண்ட பேசிய ஒரிசா பாலு , தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் செல்வா, கே.வி.கே.மள்ளர் ஆகியோர் இன்றைய சூழலில் வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவர தனிமனிதன் போதும் ஆனால் அதனை மக்களிடத்தில் கொண்டுசென்று மீட்டெடுக்க தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களால் மட்டுமே முடியும் என்றனர். அவர்தான் மருதநில மக்கள் இழந்த பாண்டியன் என்ற வரலாற்றை மீட்டார். தன்பெயரில் பாண்டியன் என்று கொண்டுவந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்றனர். மேலும் ஈழத்தில் படுகொலையான கரும்புலிகள் பெரும்பாண்மையானவர்கள் மருதநில மக்கள் என்றனர். நிகழ்வின் நிறைவாக தலைவர் தமிழினவேந்தர் ஈழத்தில் இனவிடுதலைக்கு இன்னுயிரை தந்த மாவீரர்களான போராளிகளை வணங்கி விருது பெற்ற ஒரிசா பாலு அவர்களின் பணியை பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக