செவ்வாய், 17 டிசம்பர், 2013

தென் மாவட்ட முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தரும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு .....


தென் மாவட்ட முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தரும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

புதிய தமிழகம் கட்சியின் 17–ம் ஆண்டு தொடக்கவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சி மாநாடு ஆகியவை தென்காசியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நெல்லை மாவட்ட மேற்கு பகுதியில் ஏராளமான வளங்கள் இருந்தும் வளர்ச்சி பெறவில்லை. தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் வேண்டும் என்று புதிய தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆளும் கட்சியில் கூட்டணி வைத்தால் பொதுமக்களுக்கு நல்லது செய்யமுடியும் என்று கூட்டணி வைத்தோம்.
ஆனால் எந்த மரத்தின் நிழலில் வளரும் செடியும் பயன்தராது. வெயிலுக்கு வந்தால் தான் அந்த செடியின் மூலம் பலன் கிடைக்கும். தென்மாவட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கு யார் உத்தரவாதம் தருகிறார்களோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம். இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக