செவ்வாய், 17 டிசம்பர், 2013

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி மாநாடு



தென்காசி: தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி இல்லாமல் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாத ‹ழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் மாநாடு நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் மிஷின், பழ மரக்கன்று, விவசாயிகளுக்கு உபகரணங்கள், ஏழை எளியோர்களுக்கு சேலை உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசியதாவது:
செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை பணிகள் தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாததால் அகலரயில்பாதை அமைக்கும் பணியில் தேக்க நிலை இருப்பதாக ரயில்வே நிர்வாகமே தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் தொடர்ந்து தொழில்வளர்ச்சியை ஏற்படுத்திய எந்தவித நடவடிக்கையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. இதனால் ஏராளமானோர் படித்து வேலைவாய்ப்பை பெரும் ‹ழ்நிலை இல்லாத நிலை தொடர்கிறது என குறிப்பிட்டார்.கூட்டத்தில் மாநில இளைஞரணி இணை செயலாளர் மதுரம் பாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் விருதுநகர் ராமராஜன், திருச்சி ஐயப்பன், மதுரை வக்கீல் பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் அரவிந்தராஜா, மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் கலந்து 
கொண்டனர். தென்காசி ஒன்றிய செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக