புதன், 29 ஜனவரி, 2014

சனவரி 28, மாமனிதர் பழனி பாபாவின் நினைவு நாள்.....

புரட்சியாளர் பழனிபாபா. 1988 ஆம் ஆண்டு... அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது. பெருங்கூட்டத்திற்கு நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர். 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள். . அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர் குடிப்பதை மறந்தார்கள்; தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்; ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்; இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா. 1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார். 'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார். அவர் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவருக்கு எமது வீர வணக்கங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக