புதன், 29 ஜனவரி, 2014

சனவரி 28, மாமனிதர் பழனி பாபாவின் நினைவு நாள்.....

பழனி பாபா, இந்த மாமனிதரை ஒரு மார்கத்தினுள் மட்டும் அடக்கி விட முடியாது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர், சாதி, மதம் மற்றும் பிற கருத்து வேறுபாடுகளை கடந்து உண்மை தமிழர்களை ஒன்றிணைக்க பாடுபட்டவர். 

இவர் படுகொலை செய்யப்பட்டது இவர் மார்க பரப்புரை செய்ததற்காக அல்ல, நம்மை முட்டாள்களாக்கி அடக்கி ஆண்டுவரும் கூட்டத்தின் முகத்திரையை கிழித்ததற்காக..

அன்று பழனி பாபாவை வெட்டி வீழ்த்தியபோது வாய்மூடி வேடிக்கை பார்த்ததால் தான், இன்று பெரியாரையும் அறுத்திருப்போம் ஏனைய தமிழர் தலைவர்களையும் அறுப்போம் என்று ஆரியக் கூட்டத்தால் துணிச்சலாக தமிழ் மண்ணில் நின்று பேசமுடிகிறது.

"அரசியல் தளத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம், நமது மற்ற பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம்" என்ற இம்மனிதனின் முழக்கம் ஏனோ இன்றுவரை தமிழக மக்களின் காதுகளுக்கு எட்டவே இல்லை.

தமிழர்களே நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், கண்திறந்து பாருங்கள் நிச்சயம் அவை அனைத்தும் ஆரிய கூட்டம் வேரூன்றி விட்டதாகத்தான் இருக்கும். அவற்றை நாமே தீர்த்துக்கொள்வோம். துரோக கூட்டத்திடம் மீண்டும் மீண்டும் அடிமையாகாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக