திங்கள், 20 ஜனவரி, 2014

டெல்லி மேல்–சபை தேர்தல்: தி.மு.க.வுக்கு ஆதரவு: கிருஷ்ணசாமி பேட்டி..


 


புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ஜனநாயகத்தை மீட்டெடுக்க தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளோம். டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவாவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. எங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.வும் அவருக்கு ஓட்டு போடுவோம்.
எனக்கும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமிக்கும் இடையே உள்ள பிரச்சினை கட்சி விவகாரம் ஆகும். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம்.
புதிதாக அறிவிக்கப்பட்ட 12 ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை ரத்து செய்யனும். இதை வலியுறுத்தி 6–ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம்.
தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை கலைஞர் தான் முடிவு செய்வார். திருச்சி தி.மு.க. மாநாட்டில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் கோவையில் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 1000 வாகனங்களில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக