புதன், 12 பிப்ரவரி, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத தளர்வு போதாது புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..



சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இது போதாது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு என தனித்தனியாக மதிப்பெண் தளர்வு கொடுக்க வேண்டும்.
மழையின்றியும், வேறு வழியில்லாமலும் பால் உற்பத்தியாளர்கள் பாலின் விலையை உயர்த்தியுள்ளனர். அவர்களின் நிலையினை புரிந்தும், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் நேற்றுமுன்தினம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடையவர்கள் பேசியதாக கூறப்படும் உரையாடல் பதிவுகளை வெளியிட்டார். இதில் உண்மைத்தன்மை இல்லை. முறையாக இதனை நீதிமன்றத்தில்தான் சமர்ப்பித்து இருக்க வேண்டும். எனவே பிரசாந்த் பூஷன் மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ராஜேந்திர பிரசாத், பகுதி செயலாளர்கள் செல்வகுமார், தில்குமார் ஆகியோர் உடன் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக