சனி, 29 மார்ச், 2014

புதிய தமிழகம், ம.ம.க. வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்..

சென்னை: தனி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி தொடர்ந்து வழக்கில் பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், மனித நேய மக்கள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக