சனி, 29 மார்ச், 2014

தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சி வழக்கு


மக்களவைத் தேர்தலில் தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் வழங்கக் கோரி புதிய தமிழகம் கட்சி தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சின்னத்தில் எங்கள் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதே போன்று, தங்கள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாரயாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (மார்ச் 28) விசாரணைக்கு வந்தன.
தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார். இந்த மனுக்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக