வெள்ளி, 18 ஏப்ரல், 2014

தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு


தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரித்தார்.
பள்ளிவாசல்
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் முன்பு மதியம் 2 மணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி கட்சியினருடன் நின்று கொண்டிருந்தார். முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்த போது அவர்களில் முக்கிய பிரமுகர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி சால்வை அணிவித்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.ரசாக், தி.மு.க. மாவட்ட பொருளாளர் சேஷக் தாவூது, தென்காசி நகர செயலாளர் நடராஜன், துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில், புதிய தமிழகம் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், தென்காசி தொகுதி பொறுப்பாளர் அரவிந்த ராஜா, ஒன்றிய செயலாளர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்
தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பனவடலிசத்திரம் பகுதியில் பிரசாரம் செய்தார். தேவர்குளத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்கினார்.
வன்னிக்கோனேந்தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி, சின்னக்கோவிலான்குளம், தர்மத்தூரணி, வென்றிலிங்காபுரம், நடுவக்குறிச்சி, வீரசிகாமணி, சேர்ந்தமரம், அருணாசலபுரம், அரியநாயகிபுரம் ஆகிய ஊர்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், இணை செயலாளர் இன்பராஜ், தேர்தல் பொறுப்பாளர் தங்கப்பாண்டியன், செயலாளர் கோவில்துரை, தி.மு.க. செயலாளர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் இசக்கி வளவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக