வியாழன், 17 ஏப்ரல், 2014

கருணாநிதி அடையாளம் காட்டுபவரே இந்தியாவின் பிரதமர்: சிவா..


தென்காசி தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தென்காசி சட்டசபை தொகுதி தேர்தல் பணிக்குழு சார்பில் தென்காசி வேன் நிறுத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் உண்மையான போட்டி. நீங்கள் வாக்குசாவடிக்கு செல்லும் போது ஒரு நொடி சிந்தித்து வாக்களியுங்கள். உங்களது முடிவு தவறான முடிவு என்றால் 5 ஆண்டுகள் நீங்கள் சிரமப்பட வேண்டும். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டமாக்கினார். கலைஞர் அதனை உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றினார். எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் என்ற பெயரை கூட கலைஞர் மாற்றவில்லை. அத்தகைய பெருந்தன்மை படைத்தவர். ஆனால் தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் இந்த ஆட்சியில் முடக்கப்பட்டன.
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களது நிலை என்றும் மாறாது. தேவேகவுடா, குஜ்ரால், போன்றவர்கள் பிரதமரானது கருணாநிதி அடையாளம் காட்டியதால். எனவே கருணாநிதி அடையாளம் காட்டுபவர் தான் இந்தியாவில் பிரதமராக முடியும்.
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக