சனி, 7 ஜூன், 2014

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் சாதிவெறிகும்பல் கொலைவெறி தாக்குதல் ......

இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடி விமானநிலையம் வந்த தலைவர் தமிழினவேந்தர் அங்கிருந்து நேராக தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் சாதிவெறிகும்பல் கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தனி ரேசன் கடை , தனி பாலம், டாஸ்மாக் கடை மூடவேண்டும் பாதுகாப்புவேண்டும் என்றனர். பிரச்சனைக்கு தீர்வு இதுதான் என்று மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தலைவர் மக்களை ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். தலைவர் தமிழினவேந்தர் வருகை அறிந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை முறப்பநாடு காவல்நிலையத்திற்கு வந்து காந்திருந்தார் . அவரிடம் தமிழினவேந்தர் மக்களின் கோரிக்கைகளை தெரிவித்தார் மாவட்டநிர்வாகத்திடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அங்கிருந்து நேராக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வருகைதந்தார் அங்கு சிகிச்சைப்பெற்றுவரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக