சனி, 12 ஜூலை, 2014

தமிழக சட்டசபை கூட்டத் தொடரிலிருந்து புதிய தமிழகம் கட்சி வெளிநடப்பு..


சென்னை 11:-நேற்று முன்தினம் கேள்வி நேரம் முடிந்ததும்,திமுக,தேமுதிக,கம்யூனிஸ்ட்,புதிய தமிழகம் கட்சிகள் உள்பட 7 கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து பேச அனுமதி கேட்டனர்.அந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால்,அது பற்றி அவையில் பேச முடியாது என்று கூறி சபாநாயகர் அனுமதி மறுத்தார்.இதையடுத்து,7 கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.அதன்பின்,வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில்,'ஓடுகாலிகள் ஓடி விட்டனர்' எனகுறிப்பிட்டார்.இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகரை சூழ்ந்து தி.மு.க உறுப்பினர்கள்.இதனால்,அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி தேமுதிக,புதிய தமிழகம்,மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.பின்னர்,சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் அளித்த பேட்டி:-அமைச்சர் வைத்திலிங்கம் அவையில் எதிர்க்கட்சியினரை,ஓடுகாலிகள் என்று பேசியது அவை நாகரீகத்துக்கு முரணானது.எனவே,அவை குறிப்பில் இருந்து அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.இதை ஏற்கவில்லை.இதனால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக