சனி, 19 ஜூலை, 2014

கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ;;;;;;

கரூர் 17;-மாணவி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி கரூரில், புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங் கினார். வக்கீல் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் வைக்கப் பட்ட கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
பிச்சம்பட்டி மாணவி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
இது வரை கொலையாளி களை கண்டுபிடிக்காததை கண்டித்தல்.
குளித்தலை நெய்தலூரில் 4 வயது சிறுமி, காவல்காரன் பட்டியில் 9-ம் வகுப்பு மாணவி, சீரையாள்பட்டியில் 8-ம் வகுப்பு மாணவி, கீழ சிந்தலவாடியில் 7-ம் வகுப்பு மாணவி ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தல் என மேற்கண்ட கோரிக்கைகள் வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நாயக்கர், இளைஞர் அணி செயலாளர் சசிகுமார், செய்தி தொடர் பாளர் செல்லமுத்து, ஒன்றிய செயலாளர்கள் தினேஷ், ஜெயக்குமார், கண்ணுச்சாமி, தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக