வியாழன், 10 ஜூலை, 2014

அமித் ஷா' பாஜகவின் தலைவராக்கப்பட்டுள்ளது, முஸ்லிம்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதாக உள்ளது...


அமித் ஷா' பாஜகவின் தலைவராக்கப்பட்டுள்ளது, முஸ்லிம்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதாக உள்ளது.
 
குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது 'சொஹ்ராபுத்தீன் போலி என்கவுண்டர்' வழக்கில் சிக்கி, பதவி விலகி, ஜெயிலுக்கு சென்று, தற்போது ஜாமீனில் வெளியே நடமாடிக் கொண்டிருக்கும் 'அமித் ஷா' பாஜகவின் தலைவராக்கப்பட்டுள்ளது, முஸ்லிம்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதாக உள்ளது.
அமித் ஷாவை பாஜகவின் தலைவராக நியமித்திருப்பது, அரசு மற்றும் அரசியல் அமைப்புகளை, எந்தளவிற்கு கிரிமினல்மயமாக்கி வருகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளஉதவுகின்றன.
இக்கிரிமினல் மயம் தான் மோடியின் நிர்வாகத் திறமை போலும்?!
26-11-2006 ல், போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்படுகிறார், சொஹ்ராபுத்தீன்.
25-07-2010 ல், அமித்ஷா கைது செய்யப்பட்டு 'சபர்மதி' ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
3 மாத ஜெயில் வாழ்க்கைக்குப்பின், அமித் ஷா ஜாமீனில் விடப்பட்டாலும் குஜராத் மாநிலத்துக்கு உள்ளேயே நுழையக்கூடாது என உச்சநீதிமனறம் தடை விதிக்கிறது.
சொஹ்ராபுத்தீன் கொலை, போலி என்கவுண்டர் தான், என்பது நிரூபணமாகி, அதில் தொடர்புடைய 'DIG 'வன்சாரா, உதவி ஆணையர் நரேந்திர அமின் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் கலவரத்தை நிகழ்த்தி, அதன்மூலம் பிரபல்யமாகி, தற்போது பிரதமராகவே ஆகிவிட்ட மோடி யின் பிரவேசம் ஒருபுறம்,
மோடியின் கிரிமினல் நடவடிக்கைகளை தலைமை தாங்கி நடத்தி வந்த அமித்ஷா, தற்போது பாஜக தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளது போன்ற விவகாரங்கள், உள்ளபடியே முஸ்லிம்களின் உள்ளங்களை குமுறச் செய்வதாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக