சனி, 19 ஜூலை, 2014

;-புதிய தமிழகம் கட்சியின் மணப்பாறை ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி 17;-புதிய தமிழகம் கட்சியின் மணப்பாறை ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை பேரூந்து நிலையம் எதிரில் மணப்பாறை சட்டமன்றத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மயான கொட்டகை, மயான பாதைகளை மறு சீரமைக்கவும், கிராமங்கள் மற்றும் நகரத்திற்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தடையின்றி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்தவும், மணப்பாறை பேரூந்து நிலையத்தை விரிவுபடுத்தவும், வையம்பட்டி ஒன்றிய இளங்காகுறிச்சி கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க கோரிபுதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்ட்த்தில் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்,மணப்பாறை ஒன்றிய செயலாளர் ஜாஜகான், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வாழையூர் குணா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலு உட்பட கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக