சனி, 19 ஜூலை, 2014

மண்ணச்சநல்லூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய கோரி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம் ..


திருச்சி 17;-மண்ணச்சநல்லூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய கோரி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
சமயபுரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மயான கொட்டகை, மயான பாதை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் சமயபுரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமயபுரம் நான்குமுனை சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் தினகரன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குணா கண்டன உரையாற்றினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலு, தொகுதி பொறுப்பாளர் சோமு, ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும், சமயபுரம் மற்றும் ச.கண்ணனூர் பேரூராட்சியை மையப்படுத்தி தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி சமயபுரம் காவல் நிலையத்தில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சமயபுரம் நகர செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை செயலாளர் ரஜினி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக