சனி, 13 செப்டம்பர், 2014

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்த தாமதமாக வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினருக்கு பகல் 2 முதல் 3 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் வராமல், மாலை 5 மணிக்கு மேல் வந்து அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், டாக்டர் க.கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது பரமக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக