சனி, 13 செப்டம்பர், 2014

புதிய தமிழகம் கட்சி நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது

ஓமலூர்:ஓமலூர் அருகே, புதிய தமிழகம் கட்சி நிர்வாகியை, கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கும்பலில், முக்கிய குற்றவாளியை, போலீஸார் கைது செய்தனர்.
ஓமலூர் அருகே, ஆர்.சி., செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து, இவரது மகன் பாபு, 37. இவர், புதிய தமிழகம் கட்சியின், மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பாபு தனது பைக்கில், செம்மாண்டப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அவரை வழி மறித்து தாக்கிய மூன்று பேர் கொண்ட கும்பல், பாபுவின் கழுத்தில், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது. படுகாயமடைந்த பாபு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணை நடத்திய, ஓமலூர் போலீஸார், பாலிக்காடு காலனியை சேர்ந்த நல்லப்பன் மகன் இளங்கோவன், 31, என்பவரை, நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, பாலிக்காடு காலனியை சேர்ந்த ராமச்சந்திரன், ஜெகன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக