புதன், 3 செப்டம்பர், 2014

உள்ளாட்சி இடைத்தேர்தல்: புதிய தமிழகம் புறக்கணிப்பு...

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை புதிய தமிழகம் புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது: உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய எதிர்க் கட்சிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் கொடுக்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலை புதிய தமிழகம் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. மறைந்த தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைகள் பாரபட்சமாக உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவதற்கு வாடகை வாகனங்களில் வர அரசு தடை ஏற்படுத்தக் கூடாது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக