சனி, 8 நவம்பர், 2014

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தேவேந்திரகுலத்தான் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோரியும், தெய்வத்திருமகனார் தியாகி.இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அரசுவிழா எடுக்க வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மும்முனைப் போராட்டம் நடத்தப்படும் என ‘தென்திசை உதித்த செஞ்சுடர்.மருத்துவர் அய்யா’ அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன் முதற்கட்டமாக முதல் போராட்டமாக இன்று (07.11.2014) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இன்று காலை 10 மணியளவில் திருச்சி-சிந்தாமணி அண்ணாசாலை அருகில் திருச்சி மாவட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கலந்துகொள்கிறார். மேலும் இன்று மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்கிறார். இந்த போராட்டமானது ஏதோ ஒரு பெயர் மாற்றத்திற்கான போராட்டம் மட்டுமல்ல, நம்சமூகத்தின் ஒட்டுமொத்த தலையெழுத்தையே மாற்றியமைக்கக்கூடிய போராட்டமாகும். 60 வயதை கடந்த நிலையிலும் இந்த சமூகத்தின் விடுதலைக்கான பாதையில் ஓய்வறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் உன்னதத் தலைவருக்குப் பின்னால் ஒருமைப்பாட்டோடு அணிதிரள்வோம். என் இனமான சொந்தங்கள் அனைவரும், இளைஞர்களும், மாணவர்களும், தாய்மார்களும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் நடைபெறவிருக்கும் இந்த முதற்கட்ட மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு கட்சிகடந்து, இயக்கம்கடந்து “சமூக அங்கீகாரம்” என்கிற உயரிய நோக்கோடு திரளாக திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறது புதிய தமிழகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக