சனி, 8 நவம்பர், 2014

திருவாரூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். இளமுருகு, ஒன்றிய செயலாளர்கள் கோட்டூர் ரஜினிகுமார், நீடாமங்கலம் சுரேஷ்கண்ணன், திருத்துறைப்பூண்டி இளங்கோ, கொரடாச்சேரி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் ஒன்றிய செயலாளர் சீனி.செம்மலர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளர் குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், மூப்பன் உள்ளிட்ட பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரஜினி, தென்பாதி தலைவர் மாகாளி, மன்னார்குடி நகர செயலாளர் ஞாயிறுநாதன், நகர இளைஞர் அணி செயலாளர் கமலகாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

அதேபோல நாகையில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு புதியதமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டசெயலாளர் சூர்யா தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் ராமகிருஷ்ணன், நாகூர் நகர செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் நேசன், ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக