ஞாயிறு, 28 டிசம்பர், 2014

காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர் ..

டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழமருதூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக ஆர்பாட்டம்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலமாக தமிழகம் விளங்கி வந்தது.
பெரியார் லட்சியத்தின் அடிப்படியில் இங்கு சீர்திருத்த திருமணம் நடந்தது. இதை ஆதரிக்கும் வகையில் திமுக ஆட்சியில் பல்வேறு உதவிகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மை காலமாக கலப்பு திருமணங்களை தடுக்கும் வகையில் கெளரவ கொலைகள் நடக்கிறது. கெளரவக் கொலைகளை தடுக்க, ஜாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக