வெள்ளி, 26 டிசம்பர், 2014

மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம் ...

கரூர்: கரூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட பிச்சம்பட்டியில் கடந்த ஜூன் 23 ம் தேதி தற்காலிகமாக பணிக்கு சென்று வீடு திரும்பிய பள்ளி மாணவி வினிதாவை வெற்றிலை கொடிக்காலுக்கு தூக்கி சென்ற மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி., கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவி வினிதா வழக்கில் 6 மாதங்களாகியும் தமிழக காவல் துறை குற்றவாளிகளை கைது செய்யாதது என்பது குற்றவாளிகள் அரசியல் பின்புலம் உடையவர்களாக இருப்பதாக சந்தேகம் தெரிவித்த அவர் தலைநகரான டெல்லியில் இதே போன்ற வழக்கில் பொதுமக்கள் கடுமையாக போராடுவதும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்பட்டு வரும் சூழலில் தமிழகத்தில் மட்டும் கொலை, கொள்ளைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது. எனவே இவ்வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்றார்.மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம்மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக