வெள்ளி, 26 டிசம்பர், 2014

தஞ்சை மண்ணில் வீர வரலாறு படைத்த தேவேந்திரர்களுக்கு வீர வண்ணக்கம்

ஊர் உறங்கிய நேரம், உலகம் உறங்கிய நேரம், 46 வருடங்களுக்கு முன்பு டிசம்பர் 25 ஆம் நாள் நள்ளிரவில் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே கீழ்வெண்மணி எனும் கிராமத்தில் முதியோர், பெண்கள் மற்றும் குழைந்தைகள் உட்பட 44கு தேவேந்திர குல வேளாளர்கள் ஒரே குடிசையில் வைத்துக் கொளுத்தபட்டார்கள் .
கொளுத்தியவன் கொழுத்த நிலபிரபு, வர்க்க மற்றும் சாதி ஆதிக்கம் நிறைந்த கொடூரன். கொலையுண்டவர்கள் ஏதுமற்ற நிராயுத பாணிகள். பகலெல்லாம் பண்ணையாரின் கழனியில் பாடுபட்டு இரவு திரும்பினால் அரைத் தூக்கம் போடுவதற்குக் கூட சொந்த வீடு அற்றவர்கள். பண்ணையார் படி அளந்தால் மட்டும் தான் அரை வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும் என்ற நிலையில் வாழ்ந்து வந்தவர்கள். பண்ணையாருக்கு நிகராக நின்று தாங்கள் பாடுபற்ற கூலியை கூடக் கேற்பதற்கு அருகதை அற்றவர்களாக வைக்கப் பட்டுஇருந்தவர்கள்
கல்வி இல்லை, சொந்த நிலம் இல்லை, பிறப்பால் உயர்வு இல்லை அரை அடிமைகளாகக் கருதப் பட்டவர்கள், ஒற்றுமை இல்லாமல் உணர்வற்று இருந்தவர்கள் . குடும்பத்தோடு நெல் களஞ்சியத்தில் பாடு பட்டும் அரை வயிர் பசி ஆற கூடக் கூலி கிடைக்காதவர்கள் ஒரு நாள் ஒன்று கூடினார்கள் அவர்கள் கேட்டது ஒரு நாளைக்கு அரைப் படி நெல் கூடுதலாக மட்டுமே. இதைக் கூடப் பொருத்துக் கொள்ள முடியாத பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடு கண்ணசைத்தார், அவரது அடியாட்கள் கூலி உயர்வு கேட்டவர்களைக் கூண்டோடு கொளுத்தினர். எந்த விதத்திலும் ஓடி தப்பிப் பிழைக்கத் திராணியற்ற முதியோர், குழந்தைகள், பெண்கள் என 44 பேரும் மாண்டனர்.
அவர்கள் ஆயுதம் தாங்கி எதிர்த்துப் போராடி வரலாறு படைக்கவில்லைதான், ஆனால் முதல்முறையாக பண்ணையாரை எதிர்த்த வீரவரலாற்றை தஞ்சை மண்ணில் பதித்தவர்கள், வீரமிகு தேவேந்திரர்கள் !! ஆதிக்கவர்கத்தினர் அவர்கள் உடலை கொளுத்தி இருக்கலாம், ஆனால் அவர்கள் எழுப்பிய உரிமை குரலை கொளுத்த முடியாது என்பதே வரலாறு . வர்க்கத்தை மறந்த சாதியமும், சாதியை மறந்த வர்க்கப் போராட்டமும் வெற்றி பெறாது என்று உலகிற்கு உணர்த்தியநாள் - டிசம்பர் 25
போராளிகளையும் தியாகிகளையும் கூலிகாரர்களாகக் சித்தரிப்பது கோழைத்தனம். அவர்கள் எழுச்சிமிகுச் சமுதாயத்தின் அடையாளம். எவர் அவர்களை மறப்பினும் புதிய தமிழகம் கட்சி மறவாது . டிசம்பர் 25 காலை 11 முதல் 12 மணி வரையிலும் அணைத்து மாவட்டங்களில் அவர்களின் 46வது நினைவு நாளை நினைவு கூறும் வகையில் 46 மெழுகுகளை ஏந்தி அஞ்சலி செலுத்துவோம். தியாகிகளைப் போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக